40 ஆண்டுகளுக்கு பின் காட்சி தரும் அத்திவரதர்.... அனைவரும் சென்று அருள் பெறுவோம்....
சின்ன காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்தபுஷ்கரினி என்ற குளத்தில் இருந்து வருகிற 1/07/2019 தேதியில் அத்திவரதர் வெளியே வந்து நாற்பத்து எட்டு 48 நாட்கள் வசந்த மண்டபத்தில் அருள்புரிகிறார். நின்ற கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள். சயன கோலத்தில் இருபத்தி நான்கு 24 நாட்கள்
அடுத்த தரிசனம் 2059ல் நாற்பது ஆண்டுகள் பின் கிடைக்கும். 40 ஆண்டு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை காண முடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில். கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.
இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.
பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.
பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.
வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.
வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…
நின்ற கோலத்திலும்,சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு கண் குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.
Leave a Comment