அத்திவரதரை காண சிறப்பு ஏற்பாடு.... முன்பதிவு தேவையில்லை...
40 ஆண்டுகளுக்குப் பிறகு அனந்தசரஸ் தெப்பக்குளத்திலிருந்து வெளிப்படும் அத்திவரதர் வரும் ஜூலை 1 - ம் தேதி பக்தர்களுக்குத் தரிசனம் தரவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
அத்திவரதர் எழுந்தருளும் உற்சவ வைபவம் குறித்த பல்வேறு வதந்திகள் பரவிக்கொண்டிருந்த நிலையில் விழா ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அத்திவரதரைத் தரிசிக்க எந்தவித முன்பதிவுகளும் தேவையில்லை என்றும் நேரடியாகச் சென்று தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பரவியிருந்ததால் அதுபற்றிய அறிவிப்புகளுக்காகக் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் (ஜூலை) 1 - ம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளிப்படும் அத்திவரதர் முதல் 38 நாள்கள் சயனகோலத்திலும், கடைசி 10 நாள்கள் நின்ற நிலையிலும் காட்சியளிக்கிறார். ஆகஸ்டு 17 - ம் தேதி அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குச் சென்றுவிடுவார்.
Leave a Comment