கோவை அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் .... வீடியோ காட்சி


கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா தேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான திருக்கோவில் மதுரை மன்னராக இருந்த திருமலைநாயக்கரால் உருவாக்கப்பட்ட கோவில் என கூறப்படுகிறது.இந்த நிலையில் திருக்கோவில் புணரமைப்பு பணிகள் நிறைவடைந்து மஹா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

முன்னதாக குண்டம் அமைத்து கணபதி வழிபாட்டுடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க வேள்விகள் நடைபெற்றன.தொடர்ந்து  குடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீரால் திருக்கோவில் விமானக்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

அப்போது வானில் கருடன் தோன்ற திரளாக கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு கும்பாபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன........
 



Leave a Comment