உலக யோகா தினம் இன்று....


ஜூன் 21... சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  
ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். 

2014 டிசம்பர் 11 அன்று 193-உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சூன் 21 ஆம் நாளை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.  ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா சபை அறிவித்துள்ளது. 

முதல்முறையாக 2015, ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியத் தலைநகர் தில்லியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார். 

இன்று தொடங்கி 5 நாட்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் யோகா செய்யும் படங்கள் வழக்கமாக இணையத்தில் வைரலாகும். யோகா தினத்தின் வரலாறு, பலன்கள் பற்றிப் பார்ப்போம். 

நாமும் நம் உடல் ஆரோக்கியத்தைப் பேண இந்த ஐந்துநாட்கள் யோகா செய்து உடலை திடமாக்குவோம். 



Leave a Comment