திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தெப்பத்திருவிழா... வீடியோ காட்சி


திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் மூன்று நாட்களாக நடைப்பெற்று வந்த தெப்பத்திருவிழா நிறைவடைந்தது.


வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர்  தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மூன்று நாட்களாக  கோலாகலமாக நடைப்பெற்று வந்த தெப்பத்திருவிழா நிறைவடைந்த்து.தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப்பெருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்றது. 

இவ்விழாவின் முக்கிய விழாவான ஆழித்தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நடைப்பெற்றது. இதன் தொடர்ச்சியாக பங்குனி உத்திர பெருவிழாவின் நிறைவுத்திருவிழாவான புகழ் பெற்ற தெப்பத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்களாக நடைப்பெற்று வந்தது. 

கமலாலயத்திருக்குளத்தில் பிரமண்டமாக வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்மிகு பார்வதி சமேத கல்யாணசுந்தர்ர் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் ஏழுந்தருள செய்யப்பட்டு  தினமும் மூன்றுமூறை கமலாலயத்திருக்குளத்தில்  தெப்பம் பவனி வந்த்து. 

இந்த தெப்பத்திருவிழாவை தினமும் பல்லாயிரக்கணக்கானோர் விடிய விடிய கண்டுகளித்தனர். கோலாகலமாக நடைப்பெற்றத்தெப்பத்திருவிழா நேற்று 16.6.19நிறைவடைந்த்து. இதைத்தொடர்ந்து சுவாமி ஆலயத்திற்கு திரும்பியது.
 



Leave a Comment