மனமும் உடலும் ஆரோக்கியம் பெற வைக்கும் தியானம் 


இவற்றிலிருந்து விடுபட்டு, மனச்சஞ்சலமற்று, அமைதியாக வாழ தியானம் துணை செய்யும். தியானம் ஒரு பூரண விஞ்ஞானமாகவும் தேவரகசியங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. ஒரு மனிதனின் தெய்வீகத்தன்மையை வெளிக்கொணரக்கூடிய அற்புத சாதனமாக தியானம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.

சுவாசத்தையே அவதானித்து தியானம் செய்தல்

எப்போதும் தியானம் செய்யும் போது மனம் அமைதியுடன் இருக்கத்தக்கதாக உடலைத் தளர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். நன்றாக மூச்சை உள் இழுத்து வெளி விடுக. பத்து தடைவைகள் மிக அமைதியாக ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளிவிடுக. பின்பு சாதாரணமாக சுவாசிக்குக. சுவாசிக்கும் போது மூக்குத் துவாரத்தினூடாகச் சுவாசம் செல்வது தொடக்கம் நுரையீரலை அடையும் வரை மனதைக் கொண்டு செல்க, மீண்டும் சுவாசம் வெளிவரும் வரை சுவாசத்தோடு மனதைக் கொண்டு வருக. நாளடைவில் மனம் கட்டுப்பட்டு தியானம் சித்திக்கும்.

மன்னிப்புத் தியானம்
இத்தியானம் செய்வதால் பிறரை மன்னிக்கும் மனப்பாங்கும், சகிப்புத் தன்மையும் உருவாகும். பதகளிப்பு, பதற்றம் அற்றுப் போவதோடு கொபம் குறைகின்றது. நிமிர்ந்து இருந்து கொண்டு நீங்கள் யாரால் பாதிக்கப்பட்டீர்களோ அவரது உருவத்தை மனதில் கொண்டு வந்து புருவத்தை உற்று நோக்கி அவரை மன்னித்தேன் எனப் பலமுறை கூறுங்கள். இதனால் அவரின் நடத்தையை மன்னிப்பதென்று அர்த்தமல்ல. அவரைப் பற்றிய கோப உணர்வை எம்மிடமிருந்து அகற்றுவதே அதன் நோக்கம். இதனால் நாம் பிறரிடம் கோபம் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது. மனம் அமைதியடைகின்றது.

மேலும் சில தியான முறைகள்
தலையின் உச்சிக்கு அப்பால் ஒரு தாமரை இருப்பதாகக் கருதி அதன் மையத்தை குணமாகவும். காம்பை ஞானமாகவும் கருதித் தியானம் செய்யலாம். இதயத்தில் ஒரு சிறு இடைவெளி இருப்பதாகவும் அதில் ஒரு சுடர் எரிவதாகவும் அச்சுடரை உங்கள் ஆண்மாவிற்கு ஆண்மாவாகிய கடவுளாகவும் நினைத்து தியானிக்கலாம்.

தொண்டைக்குழிக்குக் கீழே ஆமை வடிவில் அமைந்துள்ள நாடியில் மனதைச் செலுத்த மனம் அசைவுற்று நிற்கும் இதனை “கூர்ம நாட்யாம் ஸ்னைதர்யம்” என்ற பதஞ்சலி சூத்திரம் விளக்குகின்றது. புருவக மத்தியில் மனதை நிலை நிறுத்தியும் தியானம் செய்யலாம்.

ஏதாவது கடவுளின் திருவுருவத்தை மனக் கண்ணில் கொண்டு வந்தும் தியானம் செய்யலாம். எம்மால் வீணாக்கப்படும் பல மணி நேரங்களில் ஒரு சில நிமிடங்களை தியானத்திற்கு செலவிட்டால் நிச்சயம் எங்கள் வாழ்வில் கோபம். பயம். துக்கம், கவலை, ஆசை என்பன நீங்கப்பெற்று நிரந்தர மன அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் உண்டாகி தெய்வீக சக்தியும் பெருகும். வாழ்வும் வளம்பெறும்.
 



Leave a Comment