இருளப்பசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா.... 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிளங்காட்டூர் ஏ.நெடுங்குளம் இருளப்பசாமி திருக்கோயில் கும்பாபிசேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடந்தது. 

கிளங்காட்டூர்ஏ.நெடுங்குளம் கிராம எல்லையில் அமைந்துள்ளது இருளப்பசாமி கோயில். கிளங்காட்டூரைச் சுற்றியுள்ள 14 கிராமங்களின் காவல் தெய்வமாகும். இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. 

பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிசேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தினசரி யாகசாலை பூஜைகளுடன் வேதபாராயணமும் படிக்கப்பட்டது. இன்று காலை புனித நீர் அடங்கிய கலசத்தை மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலய குருக்கள் தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் சிவாச்சார்யார்கள் தலையில் சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். 

காலை 9.30 மணிக்கு கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிசேகத்தை முன்னிட்டு அன்னதானமும் நடை பெற்றது. 
 



Leave a Comment