ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா


ராமலிங்க பிரதிஷ்ட்டை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில்  ராமர் விபிஷ்ணர்க்கு பட்டாபிஷேகம் செய்யும்  நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான ஆன்மீக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொண்டனர்.

  ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திசென்று இலங்கையில் சிறை வைத்த போது ராமர் ராவணனிடம் போரிட்டு ராவணனை கொன்று சீதையை மீட்டு வருகிறார். இதில் ராவணன் பிராமணன் என்பதால் ராமர்க்குபிரம்மஹத்திதோஷம் நீங்க அகத்தியர் மூலம் ராமர் இராமேஸ்வரத்தில் சிவலிங்கம் அமைத்து அதற்கு பூஜைகள் செய்து வழிப்பட்டு தம்மிடம் உள்ள தோஷத்தை நீக்கி கொள்கிறார். அத்துடன் ராவணன் தம்பி விபிஷ்ணர் ராமரிடம் தஞ்சம் அடைந்த உடன் ராமர் விபிஷ்ணர்க்கு பட்டாபிஷேகம் செய்துவைக்கிறார். அதன் நிகழ்வாக வருடம் தோறும்; ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்று வருகிறது.

முன்னதாக இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்ய  3 மணியிளவில் கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும் அதனை தொடரந்து 6 பால நடைபெற்று பின் கோவில் நடை அடைக்கப்பட்டு ராமர் புறப்பாடாகி தனுஸ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலுக்கு சென்றது.

 ஆதன் பின்னர் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று கோதண்டராமர் கோவிலில் ராமருக்கு 16 வகையான சிறப்பு தீபாராதணைகள் நடைபெற்றது.  முடிந்து அதன் பின் ராமர் கோவில் எதிரே கோதண்டராமர் கோவில் குருக்கள் சஞ்சீவி அவர்களால் விபீஷ்ணர்க்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதணைகளும் நடைபெற்றது. பட்டாபிசேம் செய்த பின் இராமரை விபிஷ்னர் மூன்று முறை சுற்றி வந்தார். அதனை தொடரந்து சவாமி அங்கிருந்து புற்பாடாகி கோவிலை வந்தடைந்து. 
 



Leave a Comment