ஸ்ரீஆதி அத்தி வரதரை காண சிறப்பு ஏற்பாடு....


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்ரீஆதி அத்தி வரதர் நிகழ்வில் பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் ரூ50 ரூபாயில் கட்டண தரிசனத்தில் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

புகழ்பெற்ற ஸ்ரீ தேவராஜ சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள அனந்த சரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆதி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை ஒன்றாம் தேதி பொதுமக்கள் தரிசனத்திற்காக  திருக்குளத்திலிருந்து வெளியே  கொண்டுவரப்பட உள்ளார்.

 இந்த நிகழ்வுக்காக இந்து சமய அறநிலையத் துறையும் காஞ்சி மாவட்ட நிர்வாகமும் பல்வேறு பணிகளை கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றது.  இதில் பொதுமக்கள் பக்தர்கள் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனத்திற்கு வரும் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் நிகழ்வு இந்து சமய அறநிலையத் துறையால் சிறப்பாக நடத்தப்படும் எனவும் இதற்காக மாவட்டம் சார்பில் 3 தற்காலிக பேருந்து நிலையங்களும் 4 சிற்றுந்து நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் மட்டுமில்லாமல் 2 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் எனவும் நகர் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளை அமைத்து பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வுக்காக 12.8 ஒன்பது கோடி ரூபாய் இந்து சமய அறநிலையத் துறையால் செலவிடப்பட்டு வருவதாகவும் திருக்கோயில் வளாகத்தில் மட்டும் புனரமைக்கும் பணிகளில் 2.50 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவாக தற்போது நடந்து வருவதாகும் இந்த வைபவத்தை காண பொதுமக்கள் பக்தர்களுக்கு இலவச தரிசனமும் அனுமதிக்கப்படும் கட்டணம் தரிசனமாக ரூபாய் 50 செலுத்தியும் எம்பெருமானை தரிசிக்கலாம் எனவும் இந்த அனைத்து வசதிகளும் சிறப்பாக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அனைத்து பல் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்வார்கள் எனவும் பொதுமக்கள் எம்பெருமானை சிறப்பாக தரிசனம் செய்ய வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 
 



Leave a Comment