காரைக்கால் மகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
காரைக்கால் மகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
காரைக்கால் மாவட்டம் சேத்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 03-ம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜையும் அதனை தொடர்ந்து கொடியேற்றப் பட்டும் வழக்கமான உற்சாகத்துடன் துவங்கியது.
அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்டவைகளில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் முக்கியநாளான மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்நது, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் அன்ன வாகனத்தில் வலம் வந்து தீக்குழிக்கு அருகில் எழுந்தருளியதையடுத்து, பூமிதித்தல் எனப்படும் தீமிதி திருவிழா இன்று மாலை நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவார கால விரதமிருந்து தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமா பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Leave a Comment