ஜூலை 1ல் துவங்குகிறது அத்தி வரதர் வைபவம்..... குளத்துநீர் வெளியேற்றும் பணி தொடங்கியது...


காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அத்தி வரதர் வைபவம்,  ஜூலை 1 ஆம் தேதி துவங்குவதை அடுத்து குளத்துநீர் வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. 

கோவில் வளாகத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கையில் இதுவும் ஒன்று. குளத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கிழக்கு கோபுரம் அருகில் உள்ள பொற்றாமரை குளத்தில் விடப்படுகிறது. மேலும், குளத்தில் உள்ள மீன்களையும் பிடித்து அந்த குளத்தில் விட இருக்கிறது. 

அனந்த சரஸ் குளத்தின் தண்ணீர் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருக்கிறது. முழுவதும் வரும், 20ம் தேதிக்கு மேல் எடுக்கப்படும். அதன் பின். குளத்தில் அடியில் தேங்கியுள்ள சேறும், சகதியும் அப்புறப்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. 

இம்மாத இறுதிக்குள் முழுதும் சுத்தம் செய்து, குளத்தில், மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர் வெளியில் எடுக்கப்படுவார். பின், அதற்கான ஆகம விதிபடி பூஜைகள் முடிந்து, ஜூலை, 1 முதல் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக 48 நாட்கள் அத்தி வரதர் எழுந்தருள்வார்.



Leave a Comment