வைகாசி  கிருத்திகை : முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்.... 


வைகாசி  கிருத்திகையை அடுத்து முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. திருத்தணி முருகன் கோயிலில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

முருகனின் ஐந்தாம் படை வீடாக விலங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகை ஞாயிற்றுக்கிழமை வந்ததாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இன்றுடன் முடிய உள்ள நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் குடும்பங்களுடன் முருகப்பெருமானை தரிசிக்க மலைக் கோயிலில் குவிந்தனர். 

மலைக் கோயில் மாட வீதிகளில் காலை 8 மணிக்கே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரூ.150  சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்களில் ஏராளமானோர் குவிந்ததால், மாட வீதியில் பொது தரிசன வரிசைகளில்  சிறுவர்கள் முதல் முதியவர், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து  முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதேபோல ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகளை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 



Leave a Comment