கிருத்திகையில் விரதமிருந்தால் .... 


ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட வேண்டும். அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். 

கந்தனை வளர்க்க சிவபெருமான் கார்த்திகை பெண்களான அறுவரை நியமித்தார். கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். தண்ணீர் மட்டும் அருந்தி முருகப்பெருமானின் மந்திரங்கள், முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம், தியானம் கோயில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். 

அன்றைய தினம் முழுவதும் முருகப்பெருமானை மனதார பூஜித்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.  கிருத்திகை நட்சத்திரத்தன்று தானம் செய்தால், அவருடை பரம்பரையினர் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்பது உறுதி. 



Leave a Comment