திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்


திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிகிக்க கட்டுக்கடங்கா பக்தர்கள் கூட்டம் இருப்பதால் இலவச தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆனது.

வார விடுமுறை, பள்ளிகள் கோடை விடுமுறை முடிய உள்ளது போன்ற காரணங்களால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பல ஆயிரம் பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கம் எங்கும் மனித தலைகளாகவே காணப்பட்டன.

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலுள்ள அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்து கொண்டிருந்தனர்.

இதனால் சுமார் 30 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து உள்ளே அனுப்ப தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.  எனவே 300 ரூபாய் டிக்கட், திவ்ய தரிசனம் டோக்கன்கள்,  இலவச தரிசன டோக்கன்கள் ஆகியவற்றை வாங்கி சென்ற  பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சற்று அதிக நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
 



Leave a Comment