திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.....
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்து கோயில் உள்ளது . நவகிரகங்களில் பரிகார ஸ்தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தை ஒட்டி நடைபெறும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு கொடிமரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத ,மங்கள இசையுடன் காலை 6.45 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது . இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 12ஆம் தேதி தேரோட்டமும் , 13ஆம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .
தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் திருவீதி உலாவை ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மோற்சவத்தின் போது மட்டுமே காண முடியும் . இதை தொடர்ந்து தெப் போற்சவம் , சண்டிகேசுவரர் உற்சவம் நடைபெற்று ஜீன் மாதம் 16ம் தேதி விசாக தீர்த்த நிகழ்ச்சியோடு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது
Leave a Comment