உடம்பில் கத்தி போடும் வினோத திருவிழா.....


திருப்பரங்குன்றம் மீனாட்சி நகரில் உள்ள அருள்மிகு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்த பக்தர்களின் உடம்பில் கத்தி போடும் வினோத திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம்  மீனாட்சி நகரில் அமைந்துள்ள தேவாங்கர் மகாஜன அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 20 ஆண்டு மகா உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன் முக்கிய நிகழ்ச்சியான இன்று கத்தி போடும் திருவிழாவை முன்னிட்டு கோவிலிலிருந்து சாமி பெட்டியை எடுத்து வைகை ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கிருந்து கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் அம்மனை வரவழைக்கும் நிகழ்வாக  நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு வினோதமாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இந்நிகழ்ச்சியில் வில்லாபுரம்.  ஜெய்ஹிந்புரம். செல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலரும் பக்தி பரவசத்துடன் ஓம்சக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
 



Leave a Comment