திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் நந்திக்கு நீர் ஊற்றி குளிர்வித்தல்


காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் ஒன்றான இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சனிக்கிழமை தோறும் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

 கடந்த ஓரிரு மாதங்களாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்னி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது . இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். சாலைகளில் வீசும் அனல் காற்று வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 இந்நிலையில் மழை வேண்டியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டியும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நந்தியை சுற்றிலும் தொட்டி கட்டி , அதனுள் நீரூற்றி நந்தி குளிர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் ஓதி மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். 

இதை தொடர்ந்து பல்வேறு  திரவியங்களைக் கொண்டு நந்திக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்  மகா தீபாராதனை காட்டப்பட்டது. காரைக்காலில் கடந்த சில மாதங்களாக ஒரு துளி மழை கூட விழாத நிலையில் மழை வரும் வரை இந்த வழிபாடு தொடரும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment