சோளிங்கர் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில் கருட சேவை 


108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில் கருட சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. 

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் ஆகம விதிகளை உருவாக்கிய  தொட்டையாச்சாரியார் என்ற வைணவப் பெரியார் ஒருவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.அவர் பெருமாளின் கருடோற்சவத்தைப் போற்றி சுலோகங்கள் எழுதியவர்.ஒவ்வொரு ஆண்டும் அவர் தவறாமல் காஞ்சீபுரம் சென்று கருடோற்சவத்தைக் கண்டு தரிசிப்பார். 

ஒரு வருடம்  உடல்நிலை இயலாமை  காரணமாக கருடசேவையைத் தரிசனம் செய்ய காஞ்சிபுரம் செல்ல முடியவில்லை.கருடசேவை அன்று அதிகாலையில் சோளிங்கர் தக்கான் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கிய இவர் கருடோற்சவத்தைக் காண இயலவில்லை என்று ஏங்கி வேண்டினார். 

பெருமாள் தன் கருடசேவைக் காட்சியை அவர் இருந்த இடத்திலேயே காட்சி தந்து அருளினார்.என்பது ஐதீகம் இதனால்தான் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை உற்சவத்தின் போது கருடசேவை கோபுர வாயிலை அடைந்ததும்  குடையைச் சற்று சாய்த்துப் மறைத்து பிடிப்பது வழக்கமாக உள்ளது.

இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு கருட சேவை உற்சவம் இன்று நடந்தது.இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் உற்சவர் பக்தோசித பெருமாள் எழுந்தருளி நான்கு மாடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என சுவாமியை தரிசனம் செய்தனர்.....
 



Leave a Comment