திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மழை வேண்டி காரீரி இஸ்ட்டி யாகம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் காஞ்சி மடம் இணைந்து மழை வேண்டி திருமலையில் காரீரி இஸ்டி யாகம் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டு யாகம் நடைபெற்று வருகிறது.
நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் போதிய மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று தொடங்கிய காரீரி இஸ்டி யாகம் 18 ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.
மேலும் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஷ்வர சாமி கோவிலில் வருண ஜபத்தையும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீரச்ஞ்சனம் மேடையில் மழையை வரவழைக்கும் அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் திருமலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் காரீரி இஸ்ட்டி யாகத்தை தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதியினர் சமேதர்களாக காரீரி இஸ்ட்டி யாகத்தில் கலந்து கொண்டனர்.
உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை, கருப்பு ஆடு ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி காஞ்சி காமகோடி பீடத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு, ஆந்திரா,தெலங்கானா,கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருந்த வேதவிற்பன்னர்கள், தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஆகியோர் யாகம் வளர்த்து காரீரி இஸ்ட்டி யாகம் நடத்தினர்.
இதேபோல் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் கபிலேஷ்வர சுவாமி கோவிலில் வருண ஜபம் நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் இருக்கும் நாத நீராஞ்சனம் மேடையில் இசைக்கலைஞர்கள் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்த வர்ஷ்னிராக ஆலாபனை நடத்துகின்றனர்.
இந்த நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், கடந்த 2017 ஆம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்ட்டி யாகம், வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன அந்த ஆண்டில் சிறப்பான முறையில் மழை பெய்து நாடு செழிப்படைந்தது. இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்ட்டி யாகத்தைத் தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும், நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள் என்று கூறினார்.
இம் மாதம் 18 ம் தேதி வரை காரீரி இஸ்ட்டியாகம், வருணஜபம், அமிர்தவர்ஷ்னி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடை பெறும் என அவர் தெரிவித்தார்.
Leave a Comment