திருச்செந்தூர் கோவிலில் 17-ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி வைகாசி திருவிழா தொடங்குகிறது.
மே 17 - அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு,
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,
5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,
10 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை,
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற உள்ளது.
மே 18 - அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு,
1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,
2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,
10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம்,
சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்,
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
மே 19 - அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு,
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,
5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,
காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,
மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை,
இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம்
திருவிழாவை கான லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
Leave a Comment