நவதிருப்பதி ஒன்பதாவது கோயிலில் சித்திரை தேரோட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
நவதிருப்பதி கோயில்களில் ஒன்பதாவது கோயிலாகவும் குரு ஸ்தலமாகவும் உள்ள ஆழ்வார்திருநகரி சுவாமி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த மே 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் சுவாமி பொலிந்துநின்றபிரான் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுகிறது.
9ம் திருவிழாவான மே 13ம் தேதி திங்கள் கிழமை காலையில்விஸ்வரூபம், திருமஞ்சணம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. சுவாமி ஸ்ரீ பொலிந்துநின்றபிரான் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளினர். தீபாராதனைக்குப் பின்னர் திரளான பக்தர்கள் தேரை கோவிந்தா... கோவிந்தா.. கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்த தேரானது மதியம் தேர் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment