ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  பேளூரில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர சாந்தி மற்றும் மழை வேண்டி 108 கலச அபிஷேகம் நடைபெற்றது.

 திருவேள்வியூர் என்று அழைக்கக்கூடிய பேளூரில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் பெருமானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் அக்னி நட்சத்திர சாந்தி ஹோமமும் மழை வேண்டியும் உலக நன்மையின் பொருட்டு நிகழும் விகாரி வருடம் சித்திரை மாதமான நேற்று  108 கலச அபிஷேகம் பூஜை சிறப்பாக நடைபெற்றது.

 இதில் அங்குள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் காலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவா ஜனம், 108 கலச ஆவாஹனம் வேத பாராயணம் பூஜை, தீபாராதனை காட்டப்பட்டு பின்னர் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் 108 கலச அபிஷேகம் பூஜை நடைபெற்றது, பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பூஜை சிறப்பாக நடத்தினர். 

இதில் 108 கலசங்களை வைத்து அக்னி ஹோமம் நடத்தப்பட்டு மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்துவது மிகவும் எதிர்பார்ப்புடன் மழையை பெறவேண்டும் என்ற ஆன்மீக பக்தியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment