திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில்   பிரம்மோற்சவம் கொடியேற்றம் 


திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  காலை 8.30 மணி முதல் 10 மணி வரை கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவ கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ,சக்கரத்தாழ்வார், பரிவார தேவதைகள் தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தனர். 

பின்னர்  கடக லக்னத்தில் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம்  வேத பண்டிதர்கள் வேதம் மந்திரங்கள் ஓத, மங்கள வாத்திய இசைக்கு மத்தியில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன்  பிரம்மோற்சவத்திற்கான கருட கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேசுகையில் பிரம்மோற்சவத்தில் ஐந்தாவது நாளான  15ஆம் தேதி கருடவாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

18ம் தேதி ரத உற்சவமும், 19ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. சுவாமி வீதி உலா வரக் கூடிய  காலை மற்றும் இரவு நேரங்களில்  போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போலீசாருடன் இணைந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது . 

கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில்  மின் அலங்காரத்தாலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும்  ஏற்படாத வகையில் போலீசாருடன் இணைந்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளும் ஊழியர்களும் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு அன்னபிரசாதம், மோர், குடிநீர்  ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் சுவாமி வீதி உலாவிற்கு முன்னதாக  பஜனைகள் ,கோலாட்டம், மயிலாட்டம் போன்ற  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறக் கூடிய வாகன சேவையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி அருள் பெற வேண்டும் .நாளுக்கு நாள் கோவிந்தராஜ சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்  1.4 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையத்திற்கு  தங்க முலாம் பூசும் பணி இன்ஜினியரிங் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.



Leave a Comment