சித்திரா பெளர்ணமிக்கு மட்டும் திறக்கப்படும் மங்களா தேவி கோயில்
தமிழக - கேரளா எல்லைப்பகுதியாயில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்திரா பெளர்ணமி தினமான இன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தமிழக - கேரளா எல்லையில், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதி பளியங்குடி எனும் இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது இந்த மங்களா தேவி கண்ணகி கோயில்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயில் கேரள மாநிலத்தின் கட்டுப்பட்டில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பெளர்ணமி அன்று மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இந்த பகுதிக்கு அருகில் தான் தேக்கடி ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியிலுள்ள தேக்கடி ஏரி வந்து படகு சவாரி செய்து இந்த ஏரிக்கு வரும் வனவிலங்குகளை கண்டு புகைப்படம் எடுத்து சொல்கின்றனர் குறிப்பாக யானைகள்,புலிகள் மற்றும் காட்டெருமைகள் போன்ற பல மிருகங்கள் இந்த ஏரி நீர் அருந்துவதற்காக வருகின்றன.
தேக்கடி ஏரி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இங்கு ஒரு சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளில் புலி இருப்பது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.
பெரியார் வனவிலங்கு சரணாலயம்
பெரியார் வனவிலங்கு சரணாலயம் 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் யானைகள், காட்டு எருமைகள், மான்கள், குரங்குகள் மற்றும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் புலி கூட காணலாம்.
இந்த சரணாலயத்தில் 350 ச.கி.மீ வனவிலங்கு காப்பகமாக (புலிகள் காப்பகம்) அறிவிக்கப்பட்டுள்ளது.வனவிலங்கு அதிகாரிகள் கணக்கெடுப்பின்படி இங்கு 62 வகையான பாலூட்டிகளும் 320 வகையான பறவைகளும் 38 வகையான மீனினங்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Comment