கள்ளபிரான் கோயில் சித்திரை தேரோட்டம்... வீடியோ காட்சி


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள நவத்திருப்பதி கோவில்களில் முதலாவது கோவிலான சுவாமி கள்ளபிரான் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

இந்த கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஏப்ரல் 29ம் தேதி 5ம் திருவிழாவை முன்னிட்டு காலையில் மங்களாசாசனமும் இரவில் கருடசேவையும் நடைபெற்றது.

 மே 3ம் தேதி வெள்ளிக் கிழமை 9ம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது.  சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளிய பின்னர் தீபாராதனை நடைபெற்றது. 

 பக்தர்கள்  கோவிந்தா... கோவிந்தா.. என்ற கோஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுந்தனர். சுவாமி கள்ளபிரான் எழுந்தருளிய திருத்தேரை தேரோடும் வீதிகளில் பக்தர்களும் பொது மக்களும் இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 



Leave a Comment