மாங்கனித் திருவிழாவிற்காக தயாராகும் காரைக்கால்....
காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ் பெற்ற மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.
63 நாயன்மார்களில் ஒருவரும், அம்மையப்பன் இல்லாத இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்காலம்மையாருக்கு காரைக்காலில் கோயில் உள்ளது. 17ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் அவரது வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஒரு மாத காலத்திற்கு ' மாங்கனித் திருவிழா ' காரைக்காலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாங்கனித் திருவிழாவையொட்டி ஜூலை 14ம் தேதியன்று மாலை மாப்பிள்ளை அழைப்பும் அதனைத் தொடர்ந்து மறுநாள் ஜூலை15ம் தேதி காலை காரைக்காலம்மையார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இரைத்தல் ஜுலை மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பரமசிவன் பிட் ஷாடண மூர்த்தியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியுள்ளது. காரைக்காலம்மையாரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசம் கோயில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் பந்தக்காலில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதை தொடர்ந்து பந்தக்கால் நடப்பட்டு மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.
Leave a Comment