குடும்பம் சுபிக்ஷ்ம் பெருக்கும் வலம்புரி சங்கு....
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேளையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து நாட்கள் வாழை மரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால் நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்.குடும்பம் சுபிட்ஷம் பெறும். பணம் வீண் விரையம் ஆகாது.தெய்வகுறைகள் விலகும். குல விருத்தி அடையும்.
வலம்புரி சங்கில் நெய் ,தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு தேன் விட்டு பஞ்சு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் ஐஸ்வர்ய கடாசம் பெருகும்.சுபகாரியங்கள் நடை பெறும்.
இடம்புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிறிதளவு வேப்பமரத்து வேரை அதில் இட்டு சிகப்பு சேலை துண்டு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஷ்டசக்திகளும், தரித்திரங்களும் விலகும்.
வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும். இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்.
Leave a Comment