அனைவருக்கும் பொதுவான சூரிய காயத்ரி....


ஓம் பூர்புவஸ்ஸுவ்:
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி!
தியோ யோ ந: ப்ரசோதயாத்!!

ய: யார்ந:நம்முடைய திய:
அறிவை ப்ரசோதயாத்:தூண்டுகிறாரோ
தத்:அந்த தேவஸ்ய:சுடருடைய
ஸவிது:கடவுளின் வரேண்யம்:
மேலான பர்க: ஒளியை
தீமஹி தியானிப் போமாக

" யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக " இது தான் காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம், " காயத்ரி மந்திரத்தை மற்றவர்களோடு கூடியிருந்து உரக்க உச்சரிக்கலாம்.  இறைவனுடைய நாம பஜனத்தை எல்லோரும் ஒன்று கூடியிருந்து உரக்க உச்சரிப்பது போன்று, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.....  

காலையிலும், மாலையிலும், நண்பகலிலும் ஆகிய மூன்று சந்தியா வேளைகளில் இந்த வழிபாட்டில் ஈடுபடுவது உசிதம்.  நண்பகலில் இதில் ஈடுபட இயலாவிடில், ஒரே ஒரு தடவை இந்த ஈடுபாட்டை ஞாபகத்திற்கு கொண்டு வந்தால் போதுமானது.  

உடல்பயிற்சி உடலை உறுதிப்படுத்துவது போன்றும், கல்வி மனதைப்  பண்படுத்துவது போன்றும், காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஊக்குவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்கு நன்மை உண்டாகிறது.  ஆடவர், மகளிர் என்ற பாகுபாடின்றிப் பெரு வாழ்வை நாடும் பெரு மக்கள் எல்லோரும், இந்த சிறந்த வேத மந்திரத்தை  நன்கு பயன்படுத்துவது உசிதம்.
 



Leave a Comment