விஷஜந்துக்களின் பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு


தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்தி இழுத்தல் போன்ற வழிபாடுகளின் வரிசையில், விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை உடைத்து வழிபாடு நடத்தினால், வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் அண்டாது என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.

ஈரோடு மாவட்டம் அலங்காரிபாளையத்தில் உள்ளது ஐயன் கோயிலில். 200 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் விஷஜந்துக்களின் பொம்மைகளை உடைத்து விநோத வழிபாடு நடைபெறுவது வழக்கம். 3 மற்றும் 4 வது வாரங்களில் பக்தர்கள் அதிக அளவில் இக்கோயிலுக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். கோயில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட கடைகளில் பாம்பு, தேள், பூரான், பல்லி, சிலந்தி, கிராந்தி உள்ளிட்ட பல்வேறு வகை விஷ ஜந்து உருவங்கள் மண்ணால் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 

பக்தர்கள் விஷ ஜந்து உருவங்களை வாங்கி ஐயன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்களை வழிபட்டு கோயில் தெற்கு மதில் சுவர் ஓரத்தில் கற்பூரமேற்றி உருவங்களை வழிபட்ட பின்னர் அவற்றை உடைத்து நொறுக்கினர். இவ்வாறு வழிபட்டால்  வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் கண்களில் தென்படாது என்பது ஐதீகம். 
 



Leave a Comment