காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் வெள்ளித் தேர் உற்சவம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத உற்சவம் பத்தாம் நாள் ஒட்டி வெள்ளி ரதம் வெகுவிமர்சையாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளி தேரை வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அருள்மிகு சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கச்சபேஸ்வரர் சுவாமி திருக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து பத்தாம் நாளான இன்று வெள்ளித் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளி ரதத்தை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் பத்து நாள் வெள்ளி ரதம் உற்சவம் மிக முக்கியமான ஒன்றாகும்.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு ஆராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது. மூன்றடுக்கு உற்சவ குடை மூலம் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெள்ளி ரத உற்சவம் தை ஒட்டி சிறப்பு வானவேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
Leave a Comment