திருப்பதி ஏழுமலையானிடம் எவ்வளவு தங்கம் இருக்குன்னு தெரியுமா?


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அபோது பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5 ஆயிரத்து 387 கிலோ தங்கம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும், 1381 கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 


இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது .மொத்தம் 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1311 கிலோ தங்கம் 3 ஆண்டு கால முதலீட்டில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக  முதலீடு செய்யப்பட்டது. 

மூன்றாண்டு காலக்கெடு  கடந்த 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது . இதையடுத்து வட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம்  1, 381 கிலோ தங்கத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்  பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1381 கிலோ தங்கமும் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது 9, 259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் பாதுகாப்பாக உள்ளது என அவர் தெரிவித்தார். 



Leave a Comment