திருப்பதி மலையப்பசாமி தங்கத்தேரோட்டத்தில் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது.
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... எனப் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Leave a Comment