மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்....


உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.


உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா ஏப்ரல் 8 ஆம் தேதி  காலை கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

கொடி மரத்தில் தர்ப்பைபுல் வைத்து வெண்பட்டுவால் சுற்றி பிரமாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது, மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி  பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

இதனை  தொடர்ந்தது விழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் நிகழ்வும், திக்குவிஜயமும், சிறப்பாக நடைபெற்றது.  அதனை தொடர்ந்து இன்று காலை  புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

மேற்கு ஆடி வீதி -வடக்கு ஆடி வீதி சந்திப்பில் அமைக்கப் பட்டுள்ள அலங்கார பந்தலில் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கல்யாண மேடை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

திருக்கல்யாண வைபவத்தை பல்லாயிரகணக்கான மக்கள் அமர்ந்து கண்டு களித்தனர்.  இதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் மிக முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது.  இதற்காக  அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார். 19 ஆம் தேதி வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.



Leave a Comment