திருப்பதியில் தரிசன டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றம்.....


திருப்பதியில்  ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்  நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்களின் ஆதார் கார்டுகளை வைத்து நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. 

பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் விதமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

எனவே பக்தர்கள் திருப்பதியில் உள்ள அரசு பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறை, திருப்பதி  ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது சத்திரம், அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் இனி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



Leave a Comment