திருப்பதி திருமலைக்கு 5 டன் மலர்கள் அனுப்பி வைப்பு....


யுகாதி பண்டிகைக்காக திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு 5 டன் மலர்கள் சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து சிறப்பு விழாக்களுக்கும் சேலம் ஸ்ரீ திருமலை திருவேங்கடமுடையான் நித்திய புஷ்பா கைங்கரிய சபா சார்பில் வாசனை மலர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலைகள் அனுப்பப்படுவது வழக்கம்.

அதேபோல் இம் மாதம் யுகாதி பண்டிகை வைபவ தினம் திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. 

அந்த வகையில், சேலம் ஸ்ரீ திருமலை திருவேங்கடமுடையான் நித்திய புஷ்பா கைங்கரிய சபா சார்பில் பூ மாலைகள் தொடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று 5 டன் எடை உள்ள அரளி, மரிகொழுந்து, ரோஜா, சாமந்தி துளசி, குண்டு மல்லி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்களை மாலையாகத் தொடுத்தனர். பின்னர் இந்த மாலைகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு லாரி மூலம் திருப்பதி திருமலைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.



Leave a Comment