பிரத்தியங்கிரா காளி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்... வீடியோ காட்சி
புதுச்சேரி மொரட்டாண்டி மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அஷ்டமி மிளகாய் வத்தல் யாகம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே மிக உயரமான 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கிரா காளி கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கம் தேய்பிறை அஷ்டமி என்பதால் விமர்சையாக நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து அசிரம் பிடாதிபதி நடதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் பைரவ பலிபூஜை மற்றும் குருதி பூஜை நடைபெற்றது.
குருதி பூஜை சைவ வழிபாட்டில் நடைபெறுவதால் வாழை மரத்தை அலங்கரித்து அவற்றிற்க்கு இரத்ததிற்க்கு பதில் குங்குமத்தை ரத்தமாக பாவித்து பூஜை செய்து அதன் பின் வாழை மரத்தை வெட்டி பலி கொடுக்கப்படும் பிறகு நள்ளிரவு 1 மணிக்கு மேல் அஷ்டமி மிளகாய்யாகம் 108 கிலோ மிளகாய் மற்றும் பல்வேறு மூலிகை உட்பட 108 வகை பொருட்களுடன் யாகம் நடைபெற்றது.
இரவு 7மணிக்கு தொடங்கிய பூஜைகள் விடியற்காலை ஆறு மணி வரை தொடர்ந்து நடைபெற்றது அஷ்டமி யாகம் நிறைவடைந்து கலச நீர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை காண 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
Leave a Comment