ஶ்ரீபிரசன்ன லக்ஷ்மி புஷ்ப பல்லக்கில் வீதி உலா... அற்புதமான வீடியோ காட்சி
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் உள்ள ஶ்ரீபிரசன்ன லக்ஷ்மி வெங்கட நாராயணசுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
அங்குள்ள ராபர்ட்சன் பேட்டையில், 84-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவின் 11-வது நாளில், புஷ்ப பல்லக்கு வைபவம் வெகு விமரிசையாக அரங்கேறியது.
தென்னகத்தின் மிகப் பெரும் புஷ்ப பல்லக்கு வைபவமாக கருதப்படும் இந்நிகழ்வில், தமிழகத்தின் குடியாத்தம், தர்மபுரி மற்றும் ஆந்திராவின் குப்பம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, இரண்டு டன்னுக்கும் அதிகமான வண்ண மலர்களால்,13 அடி அகலத்திலும் 40 அடி உயரத்திலும் புஷ்ப பல்லக்கு தயாரிக்கப்பட்டிருந்தது.
அலங்காரத்துடன் விளங்கிய அதனை 250 பக்தர்கள், பரவசத்துடன் சுமந்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த பிரம்மோற்சவ விழாவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
Leave a Comment