திருப்பரங்குன்றம் பங்குனித் தேர் திருவிழா


ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான மக்கள் முருகப்பெருமானை தரிசித்தனர்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனிப் பெருவிழா விற்கான கொடியேற்றம் 12ஆம் தேதி நடைபெற்றது விழாவினையொட்டி தினமும் தெய்வானையுடன் முருகப்பெருமான் காலையில் பல்லக்கிலும் மாலையில் தங்க மயில் வாகனம் அன்ன வாகனம் பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது
இன்று தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு கருப்பண்ண சுவாமி சன்னதியில் எழுந்தருளினர். அங்கு பூஜை செய்யப்பட்டு 5 .45 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார் 

.சரியாக ஆறு இருபத்தி ஐந்து மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க கோயில் வாசல் நிலையிலிருந்து தேர் புறப்பாடு ஆனது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோசத்துடன் தேரை வடம்பிடித்து கிரிவலப் பாதை வழியாக சென்றனர். தேருக்கு முன்பாக விநாயகர் சிறிய சட்டத்தேரில் புறப்பாடு ஆனார்.

 தேரோட்ட திருவிழாவையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்கியும் காவடி எடுத்தும் முருகப் பெருமானே வணங்கினர் விழாவில் நிறைவு நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது
 



Leave a Comment