திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்....
ஆறு படை வீடுகளில் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருக்கல்யாணம் இன்று நடைபெற்து.
மதுரை மாவட்டம் திருபரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மார்ச் 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது .
திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் இன்று வெகு விமர்சையாக நடந்தது திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று இரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம் .வந்தடைந்தனர்.
அதற்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மணக்கோலத்தில் தெய்வானையுடன் குளக்கரையில் பெற்றோர்களை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது .
பின்பு சுவாமி கோயில் முழுக்க மண்டபத்தில் எழுந்தருளி கண்ணூஞ்சல் நிகழ்ச்சி நடந்தது அதனைத் தொடர்ந்து கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமிகள் எழுந்தருளினர் அங்கு திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றது யாகசாலை பூஜை முடிந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது அதனை தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சியும் திருமண சம்பிரதாயங்களும் நடந்தன திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Leave a Comment