பேரூர் பட்டீஸ்வரர் தெப்பத்தேர் திருவிழா... வீடியோ காட்சி
நாற்று அறுவடை திருவிழாவின் நிறைவாக பேரூர் பட்டீஸ்வரர் பச்சைநாயகி உடன் தெப்பத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பாக ஆனி நாற்று நடும் விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து கடவுள் மனிதனாக வந்து நெல்லை அறுவடை செய்யும் நிகழ்வு விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
இதில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் எழுந்தருளிய தெப்பத்தேர் விழா நேற்றிரவு பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் முன்பு உள்ள குளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவ்விழா பாரம்பரியமாக பழமை மாறாமல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது . பட்டிஸ்வரர் உடன் பச்சைநாயகி அம்மன் வீதி உலா நடைபெற்றது. தேவேந்திர குல சமுகத்தினர் மற்றும் பட்டீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Leave a Comment