திருவிழாவுக்கு தயாராகும் பணை ஓலை தெப்பம்.....
உலக பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி திருக்கோயில் பங்குனித் தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா வரும் 20.03.2019 அன்று புதன் கிழமை மாலை 7 மணிக்கு நடைப்பெற உள்ளது.
இந்த வருடம் 20 வருடம் கழித்து இயற்கை தெப்பமான பணை ஓலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தை வடிவமைத்து வருகினர் அந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் .
பிளாஸ்டிக் பொருட்கள் தவிற்கும் விதமாக இயற்கை மரமான பணை ஓலைகளால் செய்யப்பட்ட தெப்பம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேன்னர்களால் செய்யப்பட்ட தெப்பம் கட்டபட்டு வந்தது.
ஆனால் இந்த முறை பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்து பணை ஓலையால் கட்டப்பட்ட தெப்பம் மக்களிடத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வை இந்த வருடம் உண்டாக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை.
Leave a Comment