திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா...


ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடானா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் பங்குனிப் பெருவிழாவில் பக்தர்களின் உள்ளங்கைகளில் "600 கிலோ " எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில்  "கைப்பாரமாக "  முருகப்பெருமான் வலம் வந்தார். 

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்  நடைபெற்று வரும்் பங்குனிப் பெருவிழாவின் 5-ம் நாளான   இன்று  பக்தர்களின உள்ளங்கைகளில் சுமார் "600 கிலோ " எடையுள்ள வெள்ளி யானை வாகனத்தில் முருகன் தெய்வானையுடன்   "கைப்பாரமாக " தூக்கி சீர் பாதம் மற்றும் பக்தர்கள் வலம் வந்தனர். பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க பக்தி பரவசம் அடைந்தனர்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் பங்குனிப் பெருவிழா இந்த சிறப்பு வாய்ந்ததாகும் இந்த திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகவே இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது திருவிழா தொடர்ந்து வருகின்ற 25-ந் தேதி வரை நடக்கிறது.

திருவிழாவின் 5ம் நாளான இன்று (16-ந் தேதி) "கைப் பாரம"் நிகழ்ச்சி விசேஷமாக நடந்தது விழாவையொட்டி கோவிலில் உள்ள சுவாமி எழுந்தருளும் வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் முருகப்பெருமான் அமர்ந்து மேல ரத வீதி சந்திப்பில் எழுந்தருளினார். 

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெய்வானையுடன் மணக்கோலம் கொண்ட முருகப்பெருமானுக்கு அரோகரா   திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி பக்தர்கள்  அனைவரும்  வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை தலைக்கு மேல்  தூக்கி ஆட்டி அசைத்து பரவசத்தோடு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும அங்கு்கூடி இருந்த பக்தர்கள் மற்றும் சீர் பாதங்கள் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளங்கைகளில் முருகப்பெருமானை கை பாரமாக சுமந்து செல்லும் நிகழ்ச்சி ஆண்டுக்கு 1 முறை மட்டுமே அதுவும் பங்குனி திருவிழாவின் போது நடை பெறும் முக்கிய நிகழ்வாகும்.



Leave a Comment