ஸ்ரீ தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மை வேண்டி 1008 கலச அபிஷேகம்
வாலாஜா ஸ்ரீ தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மை வேண்டி 1008 கலச அபிஷேகளுடன் 1000 நாதஸ்வர மேலதாலங்களுடன் 16 தெய்வங்களுக்கு திருகல்யானம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் பிரோஹித் கலந்துகொண்டு வழிப்பாடு செய்தார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி யாக பீடத்தில் மஹோத்சவம் 2019 என்ற தலைப்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழித்தோங்க பருவகால மழையை வேண்டியும் 16 தெய்வங்களுக்கு ஒரே முகூர்த்தத்தில் ஒரே மேடையில் திருக்கல்யாணமும் மற்றும் தன்வந்திரி யாக பீடத்தின் பதினைந்தாம் ஆண்டு கல்வெட்டு திறப்பு விழாவும் மேலும் தன்வந்திரியாக பீடத்தை 58வது ஜெயந்தி விழா என்பன உள்ளிட்ட முப்பெரும் விழா கலந்த நிகழ்ச்சி வெகுவிமற்சியாக நடைபெற்று வருகிறது.
இதில் 1008 கலச அபிஷேகம் செய்தும் ஆயிரம் நாதஸ்வர இசையும் மேலதாளங்கல் முழங்க 16 தெய்வங்களுக்கு திருமண நிகழ்ச்சியானது துவங்கியது மேலும் இந்த ஐந்தாம் ஆண்டு தெய்வங்களின் திருமண நிகழ்ச்சியின் நினைவையொட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது இதில் தமிழக ஆளுனர். பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கல்வெட்டினை திறந்து வைத்தார் மேலும் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சாமிகளை வழிபட்டார்.
இதனை தொடர்ந்து கிராமிய கலைஞர்கள் ஆனா நாதஸ்வர கலைஞர்களை பாராட்டி சான்றுகள் வழங்கினர் .பின்னர் பேசிய ஆளுனர் . மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி 2016 ம் ஆண்டு யோக ,சித்தா ,ஆகிய துறைகளை மக்கள் நன்மைக்கு துவைக்கி வைத்தார் .என பேசினார் .இவ் விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.
Leave a Comment