கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !


கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க ....
இது மாணிக்கவாசகரின் சிவ புராணத்தில் வரும் இன்னொரு புகழ் பெற்ற  வரியாகும். இதற்க்கு திருப்பெருந்துறையிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டு அருளிய குருமணியான தெய்வத்திற்கு இந்த வரிகள் அஞ்சலி செய்வதாக பொருள் கூறப் பட்டருக்கிறது.

கோ கழி என்பது திருப்பெருந்துறைக்கு வேறு ஒரு பெயராகும். நம் நாடு சித்தர்களுக்கு பெயர் போனது. சித்து என்பதுதான் சிந்து என ஆகி பின் இந்து ஆகி இந்தியா அந்து என்று கூட ஒரு  சொல் உண்டு . 

இந்த சித்தர்கள் மனிதனின் முதுகு தண்டின் ஆற்றலை நன்கு உணர்த்திருந்தனர். எனவே சிவபுராணம் வரிகளை சித்தர் நோக்கில் பொருள் கூறும் சித்தர் வழி அறிஞர்கள் அதற்க்கு வேறு ஒரு ஆழ்ந்த போருளைத்தருகிறார்கள். 

சித்தர் முறையில் திருப்பெருந்துறை என்பது ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையான சகஸ்ராரம் என்று உட்ப்பொருள் கூறப் படுகிறது . அதற்கொப்ப கோ கழி என்பதற்கு முதுகுத்தண்டு என பொருள் கூறுகிறார்கள் . குண்டலினி எனும் ஞான ஆற்றலை ,கிழ் இருந்து மேலே கொண்டு செல்லும் முறையான ஞானப் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பது vertibral column எனும் முதுகு எலும்பே ஆகும் .


தேகத்தின் அரசன் ஆன்மா ...
எல்லா ஆன்மா வுக்கும் தலைவன் இறைவன் 
கோ --அரசன் , கழி ---கோல் குருமணி ---ஒளிபடைத்தவன் 
எனவே கோல் எனப் படுவது மூலாதாரத்தையும் ,சகஸ்ராரத்தையும் , இணைத்து நிற்கும் முதுகு தண்டாக கொள்ளப் படுகிறது. இந்தத்தண்டை ஞான வழியில் ஆள்வதே குண்டலினிய ஞானப் பயிற்சியாகும் இதனை நூல்களின் வாயிலாக பெற முடியாது. தகுந்த ஞான குரு தந்து தான் இதைப் பெறவேண்டும் .

குரு தரும் அனுபவ முறை இந்த ஞானம் குரு தனது கரங்களால் சீடனின் மேனியில் கிழ் இருந்து தடவி இந்த ஆற்றலை மேலே கொண்டு வரவேண்டும். இதுவே இந்த கோகழியை ஆளும் முறையாகும் . இதனை கற்ப்பிக்கும் ஆசானே ஞான குரு அவரே குரு மணி !

இந்த தண்டில் இடகலை பிங்கலை சுழு முனை என மூன்று நாடிகள் இருக்கின்றன . மனிதன்அஞ்ஞானியாக இருக்கும் போது,அறியாமையில் வாழும் நிலையில் இருக்கும் போது இடகலை பிங்கலை எனும் இரு நாடியில் உயிரின் சக்தி நடமாட்டம் நடை பெறுகிறது .

அவனுக்கு ஞானம் வாய்க்கும் போது இந்த இரு நாடிகளின் தன்மை மாறி , சுழு முனை நாடி பிரகாசம் அடைகிறது. அப்போது தான் அந்த நாடி திறக்கிறது , பாதையும் திறக்கப் படுகிறது அந்த சுழு முனை நாடியின் கிழே மூலாதாரத்தில் இருக்கும். ஈசரை மாணிக்க வாசகர் ஆருரன் என்கிறார் . திருமூலர் அதோ முக தரிசனம் என்கிறார் . 

மூலாதாரத்தில் இருக்கும் ஆரூரில் இருந்து திருப்பெருந்துறைக்கு அதாவது ஸகஸராரம் செல்லும் பாதைதான் கோகழி . இந்த அக உடலின் ஞானப் பயணத்தை தரும் குருவே குருமணியாகிய இறைவன்.

இந்த முதுகு தண்டிக்கு வீணாதண்டம் எனவும் பெயர் உண்டு. இதன் பெருமையை திரு மூலர்
"கோணா மனத்தை குறிக்கொண்டு கிழ்க்கட்டி 
வீணாத தண்டுலே வென்யுரத்தான் நோக்கி ..".
என்கிறார் இந்த முதுகுத்தண்டில் 33 எலும்புகள் சங்கிலே போல் வளையங்களாக இருக்கிறது .இதுவே நம்மை நிமிர்ந்து நிற்க செய்கிறது. இந்த தண்டை மனதில் கொண்டே பண்டைத் தமிழர்கள் யாழ் எனும் இசைக் கருவியை அமைத்தனர் . அந்த அளவிற்கு முதுகு எலும்பின் வடிவம் அவர்களுக்கு பரிச்சயம் ஆகி இருந்தது .

 

ததிசி என்ற முனிவர் இந்திரனுக்கு வஜ்ராயுதமாக தனது முதுகு எலும்பை தந்ததாக புராண கதை இருந்தது. இந்தக்கதை 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் மத்தியில் பிரபலமான கதையாக இருந்திருக்கிறது . 

எனவே தான் திருவள்ளுவர் தனது குறளில் "என்பும் உறியர் பிறர்க்கு " எனக் குறிப்பிட்கிறார். எனவே இந்த முதுகுத்தண்டைப் பற்றிய அறிவும் நிலைப்பெற்று இருந்திருக்கிறது. மனித உடல்லே அதன் அமைப்பே ஆலயமாக ,பண்டைய நாளில் இருந்தது. என்பதற்கு ஆதாரமாக ஆலயங்களின் கொடி மரத்தின் 33 வலயங்கள் அமைக்கப் பட்டன .கழுத்தில் அணியும் அக்க மாலை 33 எண். தேவர்கள் எண்ணிக்கை 33 கோடி. இந்த 33 என்ற எண்ணும் குறிப்பிடத்தக்க முறையில் புழக்கத்தில் இருந்திருக்கிறது . 

எனவே கோகழி பயன்படுத்தும் யோக முறை பண்டைய நாளில் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்திருக்கலாம் . ஆலயங்கள் யோக முறை பயிலும் இடங்களாகவே ஆதியில் இருந்துள்ளன . கோயிலில் வழிபாட்டிற்கு பிறகு உடனே போய் விடக் கூடாது ,சிறிது உட்கார்ந்து தான் போகவேண்டும் என நாம் இப்போது உடகார்ந்து கதை பேசுகிறோமே அந்த உடகார்ந்து போகும் வழக்கே யோகம் செய்ய உடகார்ந்து போவதையே குறிப்பதாக எண்ணுகிறேன் .

எனவே கோகழியாண்ட குருமணி தன் என்பதில் கோகழி என்பது திருப்பெருந்துறை என்ற உரைக் குறிப்பிடாது .அது ஆழ்ந்த சித்தர் இயலை குறிப்பதாக கொள்ளலாம் .

கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க !

- அண்ணாமலை சுகுமாரன்



Leave a Comment