திருப்பதி.... விரைவில் வருகிறது அம்மவாரு செயலி....


திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான படங்கள் குறித்து பக்தர்கள் விளக்கம் பெறுவதற்காக "பத்மாவதி அம்மவாரு ஆப்' என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் அருகிலுள்ள தோட்டத்தில், தாயாரின் அவதாரம் குறித்த விளக்கப்படங்கள் தற்போது வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களின்மூலம், தாயாரின் அவதாரம் குறித்த புராணத் தகவல்களைப் பக்தர்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும். இந்தப் படங்கள், விரைவில் செயலி வடிவத்துக்கு மாறும் எனத் தெரிவித்தார்.

இந்தச் செயலிக்கு, `பத்மாவதி அம்மவாரு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் செயலியை பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியில், தாயாரின் புகைப்படங்களைத் தொட்டால், அந்தப் படங்கள்குறித்த தகவல்களை அறியலாம். மேலும், கோயில் மண்டபத்திலுள்ள சிலைகள்குறித்த விவரங்களையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். `பத்மாவதி அம்மவாரு' செயலி, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் கோயில் மண்டபங்களில் உள்ள சிலைகள் குறித்த தகவல்களையும் இந்தச் செயலியில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியை தேவஸ்தானம் விரைவில் அறிமுகம் செய்யும் என்றார் அவர்.
 



Leave a Comment