கள்ளழகர் கோவிலில் மார்ச் 18 ல் திருக்கல்யாண வைபவம் தொடக்கம்
108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது திருக்கல்யாண வைபவம்.
இந்த விழாவானது வருகிற 18-ந்தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் அதே மண்டப வளாகத்தில் சாமி, தேவியர்களுடன் எழுந்தருள்வார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ந்தேதி, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் விழா நடைபெறுகிறது. மேலும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருக்கல்யாண திருக்கோலத்தில் கள்ளழகர் பெருமாள், மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணக்கிறார்.
Leave a Comment