கோயிலில் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது...ஏன் தெரியுமா...?


ஒவ்வொரு சிவன் கோயில் வாசலிலும் நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலங்களில் நந்திக்கு சிறப்பு பூஜை செய்து முக்கியத்துவம் கொடுப்பர். நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என பலரும் கூறுவர்.

இதற்கு காரணம் நந்தி கர்ப்பகிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். நந்தி சிவனின் வாகனமாகும். வாகனம் எதுவாக இருந்தாலும் அது ஜீவ ஆத்துமாவை குறிக்கும். ஜீவ ஆத்துமா கருவறையில் உள்ள பரம ஆத்துமாவை (இறைவன்) குறிக்கும். ஜீவாத்துமாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். 

இதனால் கருவறையில் உள்ள இறைவனை பார்த்த வண்ணம் உள்ளது. நந்தியின் குறுக்கே செல்ல தடை விதிக்க காரணம் கடவுளை அடைய  நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்பதால் தான். சன்னதியை மறைத்து நிற்க வேண்டாம் என்பதற்கு காரணமும் இதுதான். 

கடவுள்களுக்கெல்லாம் முதல்வன் எப்படி விநாயகரோ அதே போல் கோயில்களுக்கெல்லாம் முதல்வன் நந்தீஸ்வரர் தான். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது. 
 



Leave a Comment