திரௌபதி அம்மன் கோயிலில் மகோத்சவ விழா
தாராசுரம் திருக்குளம் மேல்கரையில் உள்ள ஆதி தீமிதி திரௌபதி அம்மன் கோயிலில் மகோத்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இது இந்த கோயிலில் நடைபெறும் 178வது ஆண்டு மகோத்சவ விழா ஆகும். கடந்த 3 ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா, 4ஆம் தேதி இரவு, ஆதி திரௌபதி அம்மனை ஸ்தாபிதம் செய்து சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைபெற்றது. 5ஆம்தேதி காலை தாய் வீட்டு சீர்வரிசையும், 10 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.
முக்கிய விழாவான நேற்று 12 மணிக்கு மகாபாரத உபன்யாசமும், மாலை 4 மணிக்கு அம்பாள் வீரசபதம் நிறைவேற்றி, அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு வீதியூலா வந்து தீமிதி வைபவமும், இரவு அம்பாள் வீதியூலா காட்சி நடைபெற்றது.
இன்று மதியம் கஞ்சிவார்த்தலும், மாலையில் புஷ்ப அலங்காரமும், ஊஞ்சல் உற்சவமும், நாளை தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று விழா நிறைவடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திரௌபதி அம்மன் கோயில் பக்தர்கள், தர்ம கர்த்தாக்கள் செய்து வருகின்றனர்.
Leave a Comment