அங்காளம்மன் கோவிலில் மாசி மயானக்கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு இன்று அங்காளம்மன் வல்லாளகண்டன் வதம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மயானக் கொள்ளை தினத்தன்று அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டு கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்.
இந்த அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் கலந்து வருவர். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி விழுந்து வணங்குவார்கள்.
Leave a Comment