பூமீஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற மகா சிவராத்திரி... வீடியோ காட்சி
மரக்காணத்தில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற மகா சிவராத்திரி யில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கிரிஜாம்பாள் சமேத ஸ்ரீ பூமீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்தாண்டின் மகா சிவராத்திரி விழா இன்று தொடங்கியது. விழாவினை முன்னிட்டு ஸ்ரீ பூமீஸ்வரர் க்கும், ஸ்ரீ கிரிஜாம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
மேலும் இரவு 7 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடைப்பெற்றன. இதில் 100 க்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சிவாய நம ஓம் , சிவாய நமஹ, நமச்சிவா என்ற பக்தி கோஷத்துடன் சிவபெருமானை வணங்கினர்..
மேலும் நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் என 4 சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. பின்னர் சிவனுக்கு அபிஷேகங்கள் ஆராதனை நடத்தப்பட்டு காலை 7 மணிக்கு மகா தீபாரதனையும் நடைப்பெறவுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சிவனை வணங்கினர் இதனையடுத்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Leave a Comment